Posts

சீந்தில் சர்க்கரை ( சர்க்கரை நோய்க்கான சிறந்த துணை மருந்து)

Image
சீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து) ஆரோக்கியம் தந்து வாழ் நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடி யைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி , வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.  இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்...